திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி, ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் மெத்தனால் சோதனையில் திருப்பூர் கோட்ட கலால் அதிகாரி ஜெய்சிங் சிவக்குமார், மத் திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ் பெக்டர் உதயச்சந்திரன் மற்றும் தாராபுரம் மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சட்டவிரோதமாக மெத்தனால் விற்பனை மற்றும் பயன் பாட்டை தடுக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது. கோவை மண்டலம் முழுவதும் சட்டவிரோதமாக மெத்தனால் விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப் படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.