தார் சாலை அமைக்கும் பணி ஜெயக்குமார் எம். எல். ஏ. தொடங்கிவைத்தார

குன்னத்தூர் பேரூராட்சி 4-வது வார்டு பொங்காளி அம்மன் நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி, ஜெயக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குன்னத்தூர் பேரூராட்சி துணை தலைவர் ஜோதிமணி சோம சுந்தரம், ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தனசேகர், குன்னத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் சரண் பிரபு, மாவட்ட அ.தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் கார்த்தி கேயன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அருண் குமார், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி