திருப்பூர்: இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியலால் பரபரப்பு

பெருமாநல்லூரில் இந்து மக்கள் கட்சி பேனர் கிழிக்கப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள். சிறிது நேரம் பரபரப்பு. இந்து மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் பெருமாநல்லூரில் தலைவர் வாடிவாசல் தலைமையில் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இந்தப் பகுதியில் அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது யாரோ சிலர் விளம்பர பேனரை கிழித்து, அகற்றியும் விட்டனர். 

தகவல் அறிந்து நிர்வாகிகள் பெருமாநல்லூர் நால்ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் காவல் துறையினரும் பேச்சுவார்த்தை நடைபெற்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றுள்ளோம். மேலும் திருப்பூரில் கொலை கொள்ளைகள் நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு மிகவும் அச்சமாக உள்ளதாகவும், திருப்பரங்குன்றத்தில் மலை முருகனுக்கு சொந்தமானது. அங்கு தற்போது நடைபெற்று வரும் பிரச்சனை கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி