திருப்பூரில் கனமழை: வாகன ஓட்டிகள் தவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று (ஜூன் 2) மாலை செங்கப்பள்ளி, பெருமாநல்லூர், சர்க்கார் பெரியபாளையம் பகுதிகளில் மாலை 4 மணி முதல் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் சென்றன. கோவை-சேலம் நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி