குப்பை மேலாண்மை விழிப்புணர்வு

பெருமாநல்லூர் ஊராட்சி பகுதிகளில் அனைத்து சமூக அமைப்புகள் இணைந்து குப்பை மேலாண்மை விழிப்புணர்வு குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவினர் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து கொடுக்கச் சொல்லி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பாலித்தீன் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி வருகிறார்கள். ஏற்கனவே 2,060 கிலோ பாலித்தீன் பைகள் மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக 1,075 கிலோ பாலித்தீன் பைகள் மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பெருமாநல்லூர் ஊராட்சி செயலாளர் பொன்னுசாமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி