திருப்பூர்: கஞ்சா கடத்தல்; ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது

திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஆட்டையாம்பாளையம் சந்திப்பில் ரோந்து பணியின்போது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோயல் மாலிக், பிள்ளையான் நிமா ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்களிடம் விற்பனைக்காக 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அவினாசி பகுதியில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி