அவினாசி: நூற்பாலையில் தீ விபத்து

அவினாசி நல்லிக்கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (40). இவர் அவினாசி ரங்காநகரில் நூற்பாலை வைத்து நடத்தி வருகிறார். 70 -க்கும் மேற்பட்டோர் பணி யாற்றி வருகின்றனர். நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட் டுள்ளது. தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த அவினாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் பஞ்சு குடோனில் இருந்து பஞ்சுபேல்கள் சேதமடைந்தன. இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி