திருப்பூர்: ரயிலில் அடிபட்டு விவசாயி பலி

ஈரோடு மாவட்டம் பொன்முடியைச் சேர்ந்த 64 வயது விவசாயி முருகசாமி, சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் (ஜூன் 2) இரவு விஜயமங்கலம்-ஈங்கூர் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி