கூட்டம் தொடங்கியதிலிருந்து நகராட்சி அதிகாரிகள் வார்டு பகுதிகளில் உள்ள அடிப்படை பணிகளை செய்யாமல் அலட்சியம் செய்து வருகிறார்கள்.
என்று குற்றம் சாட்ட ஆரம்பித்தனர்.
ராக்கியாபாளையம், மற்றும் எஸ் வி கார்டன் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் பணிக்கு, மற்றும் பாதாள சாக்கடைகள் அமைக்கும் பணிக்கு சாலைகளை தோன்டி அதனை சீர் செய்யாமல் பல மாதங்களாக வைத்துள்ளதால், சாலையை உபயோகிக்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்மேலும் திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது.
அதற்கான குடிநீர் தேவைக்கான ஏற்பாடுகளை செய்ய காலதாமதம் செய்து வருகிறது.
ஆனால் ஒவ்வொரு மாதமும் குடிநீர் பராமரிப்பு, சாலை பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மாதம்தோறும்ஒருகணிசமான தொகையினைசெலவிட்டு வருகின்றீர்கள்ஆனால் அதிகப்படியானவார்டு பகுதிகளில்எந்த ஒரு அடிப்படைதேவைகளையும் முழுவதுமாகநிறைவேற்றாமல் அதிகாரிகளின்அலட்சியப் போக்கால்பொதுமக்கள் மிகவும்பாதிப்படைந்து வருகின்றனர்.