ஊத்துக்குளி அருகே ஓடக்காடு பிரிவு பகுதியில் நேற்று இரவு சாலையை கடக்க முயன்ற 61 வயது முதியவர் ஹரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த ஈரோட்டை சேர்ந்த தருண் சங்கர் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.