திருப்பூர்: லாரி மோதி முதியவர் பலி

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த சின்னச்சாமி (60) என்பவர், தனது மனைவி நாகலட்சுமியுடன் சேவூர் அருகே கரடி கோவிலுக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். புளியம்பட்டி-அன்னூர் சாலை நீலிபாளையம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சின்னச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாகலட்சுமிக்கு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேவூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி