அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்துக்கு 7,889 கிலோ பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச். ரகப் பருத்தி கிலோ ரூ.70 முதல் ரூ.78.69 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது