ரூ. 4½ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அவினாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்த 6.2 டன் பருத்தி, மொத்தம் ரூ. 4.50 லட்சத்துக்கு ஏலம் போனது. ஆர்.சி.ஹெச். ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7,000 முதல் ரூ. 7,899 வரையிலும், மட்டரகப் பருத்தி குவிண்டால் ரூ. 3,000 முதல் ரூ. 4,030 வரையிலும் விற்பனையானது. இந்த ஏலத்தின் மூலம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சங்க மேலாண்மை இயக்குனர் காவியா இது குறித்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி