ரூ. 11லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் ரூ. 11 லட்சத்து 35 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வார ஏலத்திற்காக 14,892 கிலோ பருத்தி கொண்டு வரப்பட்டிருந்தது. இதில், டி.சி.எச். ரகப் பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 8,000 முதல் ரூ. 8,500 வரையிலும், ஆர்.சி.எச். ரகப் பருத்தி ரூ. 7,000 முதல் ரூ. 8,300 வரையிலும், மட்டரக பருத்தி ரூ. 1,500 முதல் ரூ. 3,000 வரையிலும் ஏலம் போனது.

தொடர்புடைய செய்தி