லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவினாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ஆத்தூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்த 100.16 குவிண்டால் எடையுள்ள 362 பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ. 9 லட்சத்து 28 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இது கடந்த வாரங்களை விட அதிகமாகும். இதில் ஆர்.சி.எச்.பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 10,133 வரையிலும், மட்டரக பருத்தி ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 5400 வரையிலும் ஏலம் போனது.

தொடர்புடைய செய்தி