ஊத்துக்குளி: கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஊத்துக்குளி அருகே உள்ள மானூர் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் (வயது 52). கட்டிட தொழிலாளி. இவர் மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து உடல்நிலை சரியில்லாத தனது தாயார் பாலாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்தானத்தின் தாயார் அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லுமாறு கூறியதாகத் தெரிய வருகிறது. இதில் கோபமடைந்த சந்தானம் வீட்டுக்குள் சென்று தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி