கஞ்சா விற்ற பீகார் வாலிபர் கைது

பீகாரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் ஷா (28) என்பவர் அவினாசி பகுதியில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் தேவம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவினாசி போலீசார் ராஜேஷ்குமார் ஷாவை கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி