வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

ஊத்துக்குளி வடக்கு, மேற்கு ஒன்றிய பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான குறிச்சி, வெள்ளியம்பதி ஊராட்சியில் புதிய தார்ச்சாலை அமைத்தல், காவுத்தாம்பாளையம் ஊராட்சியில் தரைப்பாலம் அமைத்தல், வெள்ளிரவெளி ஊராட்சியில் ஆழ்துளை குழாய்க்கான மின் மோட்டார் பைப் லைன் இணைப்பு உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதை யொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி