திருப்பூர்: தேர்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரில் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் பங்குனி மாத குண்டம் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரில் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி.ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் உள்ளது. 

இந்த கொண்டத்துக்காளியம்மன் கோவில் பங்குனி மாத குண்டம் தேர் திருவிழா வருகிற இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது, வருகிற எட்டாம் தேதி முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், 12-ம் தேதி மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் பங்குனி மாத குண்டம், தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள், தீபாராதனைகள் செய்து திருத்தேரில் ஆயக்கால் நடல் (தேர் முகூர்த்தக்கால் நடல்) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அறநிலைய துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள், மற்றும் உள்ளூர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி