அவிநாசியில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நீதிமன்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான பொருள்கள், புகையிலைப் பொருள்கள் கொட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், திடீரென மா்மப் பொருள் வெடித்ததில் குப்பைகளில் தீ பரவி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.