திருப்பூர் மாவட்டம், உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான நலத்திட்ட பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் வரும் 12ஆம் தேதி தளிரோட்டில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. மடத்துக்குளம், உடுமலை தாலுகாக்களைச் சேர்ந்த தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் தகுந்த ஆதாரங்களுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளைப் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.