அவினாசி கணேசபுரம் பகுதியில், பாஸ்போர்ட் மற்றும் விசா காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனைச் சேர்ந்த ஜோசப் கார்க்போ (53) என்பவரை அவினாசி போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.