இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற பயனாளிகளை இனம் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டால் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி 14 பயனாளிகளை கண்டறிய முடியாத நிலை உள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் குடியிருப்பு வீடு அமைத்து குடியிருக்காமல் நிபந்தனை மீறியுள்ளதால் அவர்களின் பட்டாவை ரத்து செய்யப்படும்.
15 நாட்களுக்குள் நேரிலோ, கடிதம் மூலமாகவோ கலெக்டர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். தவறும்பட்சத்தில் பட்டாவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.