திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குள் வடமாநிலத்தினர் போல் நடித்து ஊடுருவிய வங்கதேசத்தினர் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். முதலிபாளையம் பிரிவில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த 17 வயது சிறுவன் மற்றும் முகமது அரிப் உசைன் (36) ஆகியோர் நல்லூர் போலீசாரால் சோதனை மேற்கொண்டு கண்டறியப்பட்டனர். இதில், சிறுவன் ஒரு ஆண்டாகவும், முகமது அரிப் உசைன் ஐந்து ஆண்டாகவும் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது.