திருப்பூரில்: உகாண்டா நாட்டை சேர்ந்த 2 பெண்கள் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருக்கும் வெளிநாட்டினரை போலீசார் கைது செய்து வருகிறார்கள். மேலும் பனியன் நிறுவனங்களில் தங்கி பணியாற்றுவோரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவினாசி அருகே பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் ஜே.ஜே. நகரில் வெளிநாட்டை சேர்ந்த 2 பெண்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்கள் வைத்திருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் அவர்கள் உகாண்டா நாட்டை சேர்ந்த எவலின்டினா (வயது 34) மற்றும் நகான்வாகி ஐஷா (31) என்பதும், விசா காலக்கெடு முடிவடைந்தும் நீண்ட காலமாக ஆவணமின்றி தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அவினாசி போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி