முட்டியன்கிணறு அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரை வழிமறித்து பணம் மற்றும் செல்போன் கேட்டு மிரட்டினர். இதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர், அவர்கள் 2 பேரையும் பிடித்து, பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், திருப்பூர் பாண்டியன்நகர் செட்டிபாளையம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (27), சிவா (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி