காங்கேயம் ஊதியூர் அருகே வட்டமலைபாளையம் திருமாயி தோட்டத்தில் விவசாயி சிவசுப்பிரமணியம் (45) என்பவருக்குச் சொந்தமான 90 ஆடுகளில், வெறிநாய்கள் தாக்கி 16 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 8 ஆடுகள் கவலைக்கிடமான நிலையில் உள்ளன. சுமார் 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் திரியும் வெறிநாய்களை உடனடியாகப் பிடிக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.