16. 45 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் திறப்பு

பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ. 16.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தி.மு.க. மாநகர செயலாளர் தங்கராஜ், ஒன்றிய தி.மு.க. செயலாளர் காளிபாளையம் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பெருமாநல்லூரில் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொது கட்டுமான தொழிலாளர்கள் நல சங்கத்தினர் அமைச்சரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி