திருப்பூர் குமரன் நினைவுநாள்.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு

காந்தியப் பாதையில் போராடி, அந்நிய ஆட்சியின் அடக்குமுறைகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு உயிர்துறந்த தியாகி திருப்பூர் குமரன் நினைவுநாள் இன்று (ஜன.11) அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சாலைக்குத் 'தியாகி குமரன் சாலை' என்றும் பெயர் சூட்டியுள்ளோம். இன்னுயிரைவிடவும் தன்மானமும் தாய்நாட்டுப் பற்றும் பெரிதென வாழ்ந்த திருப்பூர் குமரனின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி