திருப்பதி நெய் கலப்பட விவகாரம்.. ஒருநபர் ஆணையம் அமைக்க முடிவு

“திருப்பதி நெய் கலப்பட விவகாரம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைக்கப்படும்” என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு அறிவித்துள்ளார். "நெய் கலப்படம் குறித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஒருநபர் ஆணையம் ஆய்வு செய்யும்" என தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இதனை விசாரித்த சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (SIT ) ஜனவரி 22 அன்று நெல்லூரில் உள்ள நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி