திருப்பதி: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாளை அதிகாலை 5 மணி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ள நிலையில், இன்றே பக்தர்கள் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, 4 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயக்கமடைந்த நிலையில், அருகிலுள்ள ரூயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி