விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 12-ம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறுமார்க்கத்தில் செப்.14-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை வரும். இதற்கான முன்பதிவு நாளை (செப்.11) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.