திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, மாநாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்களை வழங்கினார்.