திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் புதிதாக வரப்பட்ட 57 பாடி வான் கேமராக்களை 44 இருசக்கர ரோந்து வாகனங்களுக்கும், 11 நான்கு சக்கர ரோந்து வாகனங்களுக்கும் கொடுத்து அதில் மூன்று வாகனங்களின் வாகன ஓட்டுநர்களுக்கு பாடி வான் கேமரா அணிவித்து அறிவுரைகளை வழங்கினார். காவலர்கள் பணி துவங்கும்போது பாடி வான் கேமரா உள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தினந்தோறும் அவரவர் பணி முடியும்போது காவல் நிலையங்களில் அதன் பதிவுகளை காவல் நிலைய கணினியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.