பஞ்சப்பூர் தனியார் பேருந்து நிலைய பணிகளை செய்த மேயர்

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதனை மாநகராட்சி மேயர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார். இந்த ஆய்வில் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி