பத்து ஆண்டுகள் பணி முடித்த சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 60% கூலி உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திருச்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அங்கீகார சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.