திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தவெக தலைவர் விஜய் அமெரிக்காவில் உள்ளது போல் இங்கு தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு தேர்தல் பரப்புரை நடத்துவது போல், மக்களை சந்திக்காமல் இவர் பரப்புரை மேற்கொள்கிறார்" என விஜய் மீது விமர்சனம் வைத்தார்.