தனியார் விளம்பர நிறுவனத்தில் ரூ. 6. 5 கோடி மோசடி

திருச்சி தில்லைநகர் 5-வது கிராஸ் சேர்ந்தவர் சுதாகர் (45 )இவர் தனது மனைவி மாலதி,
சகோதரர் ராஜேஷ், அவருடைய பள்ளி நண்பர் ஜான் பிரிட்டோ அமிர்தராஜ், அவரின் மனைவி மஞ்சு மார்கிரெட்
ஆகியோருடன் விளம்பர தொழில், விளம்பர பலகை, தொழில் நுட்ப ப தொழிலை தொடங்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்துக்கு கிரியேட்டிவ் இந்தியா மற்றும் அஸ்பயர் என பெயரிட்டனர்.
இவ்வாறு கூட்டாக தொழில் செய்து வந்த நிலையில் ஜான் பிரிட்டோ அமிர்தராஜ் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஆகிய இருவரும் இன்னொரு பெயரில் புதிய நிறுவனத்தை சக பங்குதாரர்களுக்கு தெரியாமல் தொடங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சுதாகர் திருச்சி மாநகர போலீசில்புகார் கொடுத்தார். அதில்
ஜான் பிரிட்டோ அமிர்தராஜ் மற்றும அவரத மனைவி ஆகியோர் திட்டமிட்டுஊழியர்கள் 4 பேரும் கூட்டு சதி திட்டம் தீட்டி ரூ. 6. 5 கோடி அளவுக்கு அஸ்பயர் நிறுவன பணம் மற்றும் பொருள்களை கையாடல் மற்றும் மோசடி செய்துள்ளனர்.
ஆகவே கூட்டான்மை தொழிலில் வந்த வருமானத்தை கோடிக்கணக்கில் மோசடி செய்த ஜான் பிரிட்டோ, மஞ்சு மற்றும் அவரது மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட அலுவலக ஊழியர்கள் ஜன்னத், கணேஷ், அஸ்கர், சதீஷ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் 6 பேர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி