கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த 25 வயது சுமை தூக்கும் தொழிலாளி சந்திரசேகர், செவ்வாய்க்கிழமை நண்பருடன் மது அருந்திய பிறகு சின்ன ஆலம்பட்டி பாறைக்குழியில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் அவரது சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் இனாம்குளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.