திருவரம்பூர் அருகே டூ வீலர் மோதி பெண் சாவு

திருச்சி திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் ஜி.டி. நாடு தெருவைச் சேர்ந்த நஸ்ரின் பானு (40) என்பவர் நேற்று (மார்ச் 4) மாலை திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, திருவரம்பூர் நோக்கிச் சென்ற டூவீலர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டூவீலரை ஓட்டி வந்த எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த விஜயகாந்த் (22) என்பவர் சிறு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திருவரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி