திருச்சியில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் கம்பி திருடிய வாலிபரை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் மாரியப்ப முதலியார் சந்தை சேர்ந்தவர் பத்மநாபன் இவர் கட்டிட ஒப்பந்தத்தாரர். இவர் திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர் கோதாவரி தெருவில் உள்ள கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். தொடர்ந்து பிப்ரவரி மூன்றாம் தேதி அன்று கட்டிடத்தில் ரூபாய் ஐந்தாயிரம் மதிப்புள்ள 7 அடி உயர இரும்பு கம்பிகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். திருச்சி கே சாத்தனூர் வடக்கு முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த குமரகுரு என்பவரை கைது செய்தனர்.