இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீர்வரத்து குறைவாக இருந்ததால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் புளியஞ்சோலை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளில் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து புளியஞ்சோலை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் புளியஞ்சோலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் புளியஞ்சோலைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.