சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை மீட்டனர். அப்பெண் நீல நிற சேலை அணிந்திருந்தார். சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது விபத்தில் இழந்தாரா, உயிரிழந்த பெண் யார் என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி