துவாக்குடி பெட்டிக்கடையில் திருடிய இரண்டு சிறுவர்கள் கைது

துவாக்குடியை சேர்ந்த வீரம்மாள் என்பவரின் பெட்டிக்கடை மற்றும் டிபன் கடையில் கடந்த ஐந்தாம் தேதி இரவு பூட்டை உடைத்து ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் தின்பண்டங்கள் திருடு போனது. இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு 13 வயது சிறுவர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி