திருச்சி வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் எஸ்ஐஆர் தொடக்கம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி, பிஎல்ஏ அலுவலர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பர்மா காலனி பகுதியில் இன்று காலை பிஎல்ஏ அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்களின் உதவியுடன் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு திருத்தப் பணி மூலம், தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி