திருச்சி: அம்மாமண்டபம் அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

திருச்சி அம்மாமண்டபம் காவிரியாறு அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்த நிலையில், திம்மராயசமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி குமார் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி