திருச்சி: வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது

திருச்சி வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் கடந்த 16ஆம் தேதி அரியமங்கலம் டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, மூன்று வாலிபர்கள் அவரிடம் தகராறு செய்து பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஆனந்தராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, கார்த்திக், பாலசுப்ரமணியம், கார்த்திக் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி