தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவானது தமிழகம் முழுவதும் வெகு உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் புலவர் மனோகரன் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் மாவட்ட இலக்கிய அணி மற்றும் மாவட்ட மாணவர் அணி இணைந்து காட்டூர் கைலாஷ் நகர் அருகே உள்ள பேட்மிண்டன் அகாடமியில் 32 வீராங்கனைகள் கலந்துகொண்ட மாபெரும் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
மேலும் 32 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த பேட்மிண்டன் போட்டியானது 4 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநகர செயலாளரும் மண்டலம் 3ன் தலைவருமான மதிவாணன் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் ஆகியோர் சிறப்பாக பேட்மிண்டன் விளையாடிய வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் திருவெறும்பூர் பகுதிச் செயலாளர் சிவக்குமார், மாநகரத் துணைச் செயலாளர் பொன்செல்லையா, பேட்மிண்டன் விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், இலக்கிய அணி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.