திருச்சி: அமைச்சர் நேருவை முற்றுகையிட்டு மனு அளித்த பொதுமக்கள்

திருச்சி பீமா நகர் பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். அப்போது, பீம நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட வீடுகளில் வசித்த 86 குடும்பங்களுக்கு உடனடியாக வீடு கட்டித் தரக்கோரி பொதுமக்கள் அமைச்சர் நேருவை முற்றுகையிட்டு மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி