திருச்சி: காங்கிரஸ் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்பணி நியமன ஆணைகளை திருநாவுக்கரசர் வழங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பிறந்த நாளை முன்னிட்டு அருணாச்சல மன்றத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் இன்று (ஜூன் 13) நடந்தது. 

தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த முகாமில் நோக்கியா, டாட்டா பிர்லா, ஒமேகா உட்பட 43 தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் சுமார் 1500 ஆண், பெண் பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி